தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை


UPDATED : ஜூலை 20, 2026 08:37 PM

ADDED : ஜூலை 20, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 08:37 PM ADDED : ஜூலை 20, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை தாக்கி கொலை விடுத்த மூவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நைனார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்தவர் கண்ணன்,39; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், கடந்த 2024ம் ஆண்டு கோவில் திருவிழா தகறாறில் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 18ம் இரவு 8 மணியளவில், அரியாங்குப்பத்தை சேர்ந்த சூர்யா என்பவர் கண்ணனிடம், பேச வருமாறு அவரது வீட்டிற்கு வந்து அழைத்தார். அதன் பேரில் வெளியில் வந்த கண்ணன் அங்கு இருந்த பிரகாஷ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மூவரும் சேர்ந்து, அவரை தாக்கினர்.

பின் ஆனந்த், கண்ணனையும், தடுக்க வந்த அவரது தாய், தந்தை கத்தியால் கிழித்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

கண்ணன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us