/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுமையான கற்றல் கற்பித்தலுக்கு விநாயகா மிஷன் டீனுக்கு விருது
/
புதுமையான கற்றல் கற்பித்தலுக்கு விநாயகா மிஷன் டீனுக்கு விருது
புதுமையான கற்றல் கற்பித்தலுக்கு விநாயகா மிஷன் டீனுக்கு விருது
புதுமையான கற்றல் கற்பித்தலுக்கு விநாயகா மிஷன் டீனுக்கு விருது
ADDED : மே 10, 2024 12:38 AM

புதுச்சேரி: விநாயகா மிஷன் பல்கலையின் டீன் செந்தில்குமாரின் புதுமையான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு, விருது வழங்கப்பட்டுள்ளது.
விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை, சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் புதுச்சேரி ஆறுபடை மருத்துவ கல்லுாரி வளாகங்களில் அமைந்துள்ள 'அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின்' டீன் செந்தில்குமார். இவர், ஆர்டர்காம் மீடியா அமைப்பு நடத்திய கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.
அங்கு அவருக்கு, உயர்கல்வி மற்றும் மாணவ திறனை மேம்படுத்தும் புதுமை முயற்சிகளில், சிறந்து விளங்கும் கல்லுாரிக்கான விருது, வழங்கப்பட்டது.
மேலும், அவர் அப்சர்வ் நவ் மீடியா மற்றும் உலகளாவிய, வணிக தலைமை மன்றம் சர்வதேச அளவில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அங்கு டீன் செந்தில்குமாரின், கல்வி சார்ந்த முன் மாதிரியான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகளில், சிறந்து விளங்குபவர் மற்றும் கல்வி நிறுவன தரங்களில் சிறந்த தலைமையாற்றுபவர் என்ற விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற டீன் செந்தில்குமாரை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்.