/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பு கவர்னரிடம் மனு
/
விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பு கவர்னரிடம் மனு
விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பு கவர்னரிடம் மனு
விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பு கவர்னரிடம் மனு
ADDED : பிப் 25, 2025 05:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், பிரதமரின் விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்துள்ள விஸ்வகர்மா உறுப்பினர்களுக்கு காலதாமதம் இன்றி செயல்படுத்த வேண்டும். வங்கிகளில் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைகள் தாமதமின்றி வழங்க வேண்டும்.
விஸ்வகர்மா தொழில் துவங்குவதற்கு அரசு சார்பில் அவர்கள் சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தை வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை துரிதமாக செயல்படுத்த ஆவணம் செய்வதாக உறுதியளித்தார். தலைவர் வெங்கடாஜலபதி, பொது செயலாளர் சண்முகம், பொருளாளர் தியாகராஜன், கவுரவ தலைவர் தங்கம், அகில இந்திய விஸ்வகர்மா பேரவை தலைவர் நாகலிங்கம் உடனிருந்தனர்.