/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கி முத்தியால்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 12, 2024 04:36 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அக்கட்சி நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ கூட்டணி சார்பில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக, பா.ஜ மாநில துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை, லுார்து நகர், மாணிக்க முதலியார் தோட்டம், மார்க்கெட் பகுதி, மகாத்மா காந்தி வீதி ஆகிய பகுதிகளில், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறினர். மேலும், பெண்கள், வியபாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்களை எடுத்துரைத்தனர்.
இந்த பிரசாரத்தில், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த கிருஷ்ணராஜ், சாய் ராஜகோபால், நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.