/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு
/
முதலியார்பேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 01:13 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் நடந்த 'மல்லர் கம்பம்' கலை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுமக்களை கவர்ந்தது.
புதுச்சேரியில் 'ஸ்வீப்' திட்டத்தில், தேர்தல் துறை சார்பில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் முதல் புதுச்சேரி முழுவதும் பல்வேறு பகுதிகளில் மல்லர் கம்பம் பாரம்பரியக் கலை மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரண்டாவது நாளாக முதலியார்பேட்டை பகுதியில் மல்லர் கம்பம் பாரம்பரியக் கலையை வீரர்கள் நிகழ்த்திக் காட்டி அதன் மூலம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மொபைல் போன் செயலிகள் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 1950 போன்ற வாக்காளர் விழிப்புணர்வுக் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேரில் பார்வையிட்டார். உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, நோடல் அதிகாரி செழியன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

