/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்ட நிகழ்ச்சி
/
வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்ட நிகழ்ச்சி
ADDED : ஏப் 09, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கரியமாணிக்கத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த அளவு ஓட்டுப்பதிவு நடந்த இடங்களில், 100 சதவீத ஓட்டுப் பதிவினை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கரியமாணிக்கம் சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவினர் செய்திருந்தனர்.

