/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்ட நிகழ்ச்சி
/
வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்ட நிகழ்ச்சி
ADDED : ஏப் 07, 2024 04:26 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் நேற்று முதல் நாளை 8ம் தேதி வரை மூன்று நாட்கள் பாரம்பரிய தப்பாட்டம் மூலம், கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டுப்பதிவு நடந்த இடங்களில், 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடந்த வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்டம் நிகழ்ச்சியை உதவி மாவட்ட ஆட்சியர் யஷ்வந்த் மீனா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு, மணிமேகலை பள்ளி அருகே, புஸ்ஸி வீதி மணிக்கூண்டு சந்திப்பு, முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு, கருவடிக்குப்பம் சந்திப்பு, ரெட்டியார்பாளை யம் ஜெயா நகர், தருமாபுரி, குருமாம்பேட், தொண்டமாநத்தம், ஏர்போர்ட் ரோடு, உறுவையாறு திடல், மங்கலம் மற்றும் கரியமாணிக்கம் ஆகிய இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்து வருகிறது.

