/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 23, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் ராஜிவ் காந்தி நகரில் கடந்த சட்ட சபை தேர்தலின் போது 54 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவானது. அப்பகுதியில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, மதர் தெரசா பயிற்சி கல்லுாரி மாணவ, மாணவியர் வில்லுப்பாட்டு, நாடகம், கவிதை, பாடல்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, யோகாம்பாள் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு ஓட்டளிப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

