ADDED : பிப் 25, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறையில், பணியின்போது இறந்த வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து, பணி நியமனம் வழங்க கோரி, சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசு தாரர்கள் நலச்சங்கம் சார்பில், சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 11வது நாளாக நடந்த போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், டேவிட் ஆகியோர் தலைமையில், சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.