/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர்கள் பெயர்களை நீக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

ADDED : செப் 06, 2024 04:16 AM
புதுச்சேரி : இறந்தவர்களின் பெயர்களை ரேஷன்கார்டுகளில் இருந்து நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டை பெற்றுள்ளவர்களில் சிலர், இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கவில்லை என்பதை இந்தத் துறை கண்டறிந்துள்ளது. இதனால் இந்தத் துறையின் அனைத்து வகையான உதவித்தொகை மானியங்கள் தொடர்ந்து வெளியிடுவதில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அந்த ரேஷன் கார்டுதாரர்கள் இந்த அலுவலகத்தை அணுகி, 30 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து இறந்த உறுப்பினரை நீக்க வேண்டும். ரேஷன் கார்டு விவரங்களைச் சரிபார்க்க, துறையின் இணையதளமான “https://pdsswo.py.gov.in/onlineservices/View_Card_Details.aspx” ஐப் பார்வையிடலாம். தவறினால், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டு இந்தத் துறையின் ரேஷன் அட்டை தரவுத்தளத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும். உதவித்தொகை மானியங்கள் வழங்கப்படாது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.