/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
/
அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : மார் 07, 2025 04:47 AM

புதுச்சேரி : மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 'கோத்ரேஜ் இந்தியா' தனியார் நிறுவனம்சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியர் அமர்தேவ் தலைமை தாங்கினார். ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். நிறுவனத்தின் மனிதவள மேலாளர் முகுதா,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுகுமார், புதுச்சேரி மண்டல தலைவர் குமரகுருபரன் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏகதேவி, முருகன், சுஜித் ஜெயன் அலெக்ஸ், மஞ்சு, ரவீனா, இந்திரா, பானுபிரியா, மதிவதனி, காயத்ரி, அன்பரசி செய்திருந்தனர்.
ஆசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.