/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணையாறு ஒப்பந்தபடி புதுச்சேரிக்கு தண்ணீர் பெற்று தர வேண்டும்: அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : ஆக 06, 2024 07:13 AM
புதுச்சேரி : பெண்ணையாறு ஒப்பந்தபடி தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீர் பெற்று தர வேண்டும் என அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
புதுச்சேரி பட்ஜெட் விவாதத்தின்போது, அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசியதாவது:
விவசாயிகள் பயன்பெற 100 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்கள் வழங்கப்படுவது சிறப்பான திட்டம். ரேஷன் கடை திறந்து இலவச அரிசி, மானிய விலையில் மளிகை பொருள் வழங்கல் அறிவிப்பு நன்றி.
பெண்ணை ஆற்றில் சாத்தனுார் அணை வழியாக சொர்ணாவூர் அணைகட்டிற்கு வரும் தண்ணீர், பங்காரு வாய்க்கால் வழியாக புதுச்சேரிக்கு தண்ணீர் தர பிரஞ்சு அரசும், தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர் அரசும் ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தை புதுச்சேரி அரசும், தமிழக அரசும் இணைந்து கடந்த 1969, 1976 மற்றும் கடைசியாக 2007 ஆண்டு புதுப்பித்தது.
ஆனால், தமிழக அரசு ஒப்பந்தப்படி இன்று வரை புதுச்சேரிக்கு தண்ணீர் தரவில்லை.
சாத்தனுாரில் இருந்து குழாய் அமைத்து ஒப்பந்தப்படி தண்ணீர் பெற்றால், கடல் நீரை குடிநீராக்க வேண்டிய எந்த திட்டமும் தேவைப்படாது. புதுச்சேரிக்கான குடிநீர் கிடைத்து விடும். எதிர்கட்சியினரின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
எனவே, எதிர்கட்சியினர் தமிழக அரசுடன் பேசி, புதுச்சேரிக்கு தண்ணீர் பெற்று தர உதவ வேண்டும். தி.மு.க., எம்.எல்.ஏ.க்களான செந்தில்குமார், சம்பத் ஆகியோர் எழுந்து தண்ணீர் பெற்று தர தயாராக இருக்கிறோம் என கூறினர்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: இது தொடர்பாக தண்ணீர் ஆணையத்திடம் வலியுறுத்தியபோது, சுமூகமாக பேசி தீர்த்து கொள்வதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.