/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தில் 2 மணி நேரம் குடிநீர் 'சப்ளை கட்'
/
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தில் 2 மணி நேரம் குடிநீர் 'சப்ளை கட்'
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தில் 2 மணி நேரம் குடிநீர் 'சப்ளை கட்'
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தில் 2 மணி நேரம் குடிநீர் 'சப்ளை கட்'
ADDED : மார் 04, 2025 09:48 PM
புதுச்சேரி : கருவடிக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு காரணமாக, இன்று (5ம் தேதி) 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பொதுப்பணித்துறை (பொதுக்கோட்டம்) செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
கருவடிக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (5ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, கருவடிக்குப்பம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதேபோன்று, லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு, சாந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (6ம் தேதி )மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, சாந்தி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மேலும், லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு, குறிஞ்சி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் 8ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குறிஞ்சி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
புதுச்சேரி தந்தை பெரியார் நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி நாளை 5ம் தேதி நடக்க உள்ளது. அதனால், தந்தை பெரியார் நகர், கோல்டன் அவன்யூ, சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் நகர், எஸ்.பி.ஐ., காலணி, ரத்னா நகர், அம்பாள் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மருதம் நகர், ஆருத்ரா நகர், மூகாம்பிகை நகர், அஜீஸ் நகர், பவழ நகர், எல்லைப்பிள்ளைச்சாவடி, திலகர் நகர், விவேகானந்தா நகர், வழுதாவூர் ரோடு, கணபதி நகர், சித்தானந்தா நகர், மோகன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில்இன்று மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.