/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டரை தாக்கிய நண்பருக்கு வலை
/
பெயிண்டரை தாக்கிய நண்பருக்கு வலை
ADDED : ஏப் 26, 2024 11:48 PM
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கிருஷ்ணா நகர், 14வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 40; பெயிண்டர். கடந்த 19ம் தேதி பெத்துசெட்டிப்பேட்டை தனியார் துணிக்கடை எதிரில் நின்றிருந்தார். அங்கு வந்த அவரது நண்பர் முத்தியால்பேட்டை, பூக்கடை வீதியைச் சேர்ந்த சசிக்குமார் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டு கன்னத்தில் அறைந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு சென்று பிள்ளையார்கோவிலில் அமர்ந்திருந்த அருள்ராஜை அங்கு வந்த சசிக்குமார் மீண்டும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அருள்ராஜ் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சசிக்குமார் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

