/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேபாளம் சென்ற புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு வரவேற்பு
/
நேபாளம் சென்ற புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு வரவேற்பு
நேபாளம் சென்ற புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு வரவேற்பு
நேபாளம் சென்ற புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு வரவேற்பு
ADDED : மார் 03, 2025 03:58 AM

புதுச்சேரி: அரசு முறை பயணமாக, நேபாளம் சென்ற புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்பளித்தனர்.
நேபாள நாட்டின் சட்டசபையை காண, அந்நாட்டு அரசு சார்பில், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
புதுச்சேரி அரசு அதற்கான ஏற்பாடு செய்ததை யடுத்து, அரசு முறை பயணமாக சபாநாயகர் செல்வம் தலைமையில், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் 7 நாள் பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்றனர்.
நேற்று, அந்நாட்டு விமான நிலையத்தில், அவர்களுக்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
நேபாளம் சென்றுள்ள எம்.எல்.ஏ.,க்கள், அந்நாட்டு சட்டசபை மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களை பார்வையிடுகின்றனர்.