/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா' சபாநாயகர் 'எஸ்கேப்'
/
'என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா' சபாநாயகர் 'எஸ்கேப்'
'என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா' சபாநாயகர் 'எஸ்கேப்'
'என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா' சபாநாயகர் 'எஸ்கேப்'
ADDED : ஆக 06, 2024 07:14 AM
புதுச்சேரி: என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா என்று சட்டசபையில் சபாநாயகர் பேசியதால் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசும்போது, புதிய கவர்னர் வர உள்ளார். அவரிடம் பேசி, முதல்வருக்கான நிதி அதிகாரம் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய திட்டங்களை நம்மால் செய்ய முடியும்.
அப்போது சபாநாயகர் செல்வம் புன்னகைத்தார். அதை பார்த்த செந்தில்குமார் எம்.எல்.ஏ., சபாநாயகராக உள்ள நீங்கள் கூட, நாளைக்கு புதுச்சேரியின் முதல்வரக வரலாம். எனவே, உங்களுக்கும் சேர்த்து தான் நிதி அதிகாரம் கேட்கின்றேன் என்று ஒரே போடாக போட்டார்.
இதனை கேட்ட சபாநாயகர் செல்வம், சிரித்தப்படியே, என்ன கோர்த்துவிட பார்க்கிறீங்களா. தேசிய ஜனநாயக கூட்டணியே அடுத்த தேர்தலில் ஜெயிக்கும். அப்போதும் கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி தான் பொறுப்பு ஏற்பார் என்றதும் சபையில் சிரிப்பலை எழுந்து, அடங்கியது.