/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார்மய விவகாரம் புதுச்சேரி அரசின் முடிவு என்ன? அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேள்வி

ADDED : ஆக 24, 2024 06:15 AM

புதுச்சேரி: மின்துறை தனியார்மயம் குறித்து புதுச்சேரி அரசு எடுத்த முடிவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களின் ஆதாரமான குடிநீர், சுகாதாரம், மின்சாரம் போன்ற முக்கியமான துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் மக்களுக்கு நன்மை.
ஜம்மு, காஷ்மீர், சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களில், மின் துறை தனியார் மயக்கொள்கையானது, ஊழியர்கள், பொது மக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்டுள்ளது.
ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசத்திலும், அம்மாநில அரசுகள் மின்துறை தனியார்மய கொள்கையை பொதுமக்களின் போராட்டத்தால் நிராகரித்துள்ளன.
மின் துறைக்கு சொந்தமான நிலங்கள், துணை மின் நிலையங்கள், மின்கடத்திகள் உள்ளிட்ட மின் கட்டமைப்புகள் மற்றும் மக்களின் முன்வைப்புத் தொகைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி சொத்து மற்றும் 3 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சகப் பணியாளர்கள் இருந்தும் மின்துறை தனியார் மயம் ஆகாது என, அரசாணை வெளியிடுவதில் அரசுக்கு தயக்கம் ஏன்?
மின்துறை தனியார் மயக்கொள்கை கைவிடப்பட்டது என்று அரசாணை வெளியிட்டு மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும். இல்லை எனில், புதுச்சேரி வரலாற்று பக்கங்களில், இந்த அமைச்சரவை காணாமல் போய்விடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.