தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திடக்கழிவு மேலாண்மை தொடர்பான குறைகளை புகார் தெரிவிக்க ‘வாட்ஸ் ஆப்’ சேவை துவக்கம்

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான குறைகளை புகார் தெரிவிக்க ‘வாட்ஸ் ஆப்’ சேவை துவக்கம்

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான குறைகளை புகார் தெரிவிக்க ‘வாட்ஸ் ஆப்’ சேவை துவக்கம்


ADDED : ஆக 05, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 08:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திடக்கழிவு மேலாண்மை தொடர்பான குறைகளை பொதுமக்கள் பதிவு செய்ய, உள்ளாட்சித் துறை சார்பில், வாட்ஸ் ஆப் சேவையை துவக்கியுள்ளது.

இதுகுறித்து, உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான குறைகளை பதிவு செய்ய உள்ளாட்சித்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்ப்பு வாட்ஸ் ஆப் எண் – 9944033399 என்ற சேவையை துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

இந்த சேவை உழவர்கரை நகராட்சி மற்றும் அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, வில்லியனுார் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளின் செயல்படுத்தப்படுகிறது. இதில், வீடுதோறும் குப்பை சேகரிக்கப்படாமல் இருப்பது, பொது இடத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பை தேங்கி கிடப்பது, சாலையோரம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் குப்பை தேங்கியிருப்பது, வாய்க்காலில் அடைத்துள்ள குப்பை, துார்வாருதல், சுத்தம் செய்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். 

இந்த சேவைக்கு புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ் ஆப் மூலம் வரும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us