/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரிசிக்கு தரும் பணம் எங்கே செல்கிறது? மாஜி அமைச்சர் சண்முகம் 'பளீச்'
/
அரிசிக்கு தரும் பணம் எங்கே செல்கிறது? மாஜி அமைச்சர் சண்முகம் 'பளீச்'
அரிசிக்கு தரும் பணம் எங்கே செல்கிறது? மாஜி அமைச்சர் சண்முகம் 'பளீச்'
அரிசிக்கு தரும் பணம் எங்கே செல்கிறது? மாஜி அமைச்சர் சண்முகம் 'பளீச்'
ADDED : மார் 28, 2024 04:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் அறிமுக கூட்டம், கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஒமலிங்கம், பாஸ்கர், ராஜாராமன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், இணை செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
புதுச்சேரியில் ஒரு கிளர்க் ஊழியரை மாற்ற வேண்டுமானாலும் உள்துறை அனுமதி பெற வேண்டும். ஒரு அமைச்சரை நீக்கி முதல்வர் அனுப்பும் கோப்பு 2 மாதம் உள்துறையில் கிடக்கிறது. புதுச்சேரி அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரிகள் தான் ஆட்சி செய்கின்றனர். அதிகாரிகள் முடிவு செய்தால் தான் பணி நடக்கும். இதை மாற்ற வேண்டும்.
மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒரு நிமிடத்தில் மாநில அந்தஸ்து பெற்று தந்து இருக்க முடியும். அதை செய்ய அவருக்கு மனமில்லை. ஆனால், தேர்தல் வந்தால் மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என கூறுகிறார்.
கடந்த காலத்தில் தெருவுக்கு தெரு ஒரு பார் இருந்தது. தற்போது ஒரு தெருவில் உள்ள 4 ஓட்டலிலும் பார் வந்து விட்டது.
இதுதான் வளர்ச்சியா? எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய தி.மு.க., உள்ளதா என தெரியவில்லை.
புதுச்சேரியில் நிர்வாக திறமையற்ற அரசை துாக்கி எறிய வேண்டும்.
ரேஷன் கடைகள் இல்லாமல்,அரிசிக்கு பதில் பணம் கொடுத்தால், மது கடைக்கு தான் அந்த பணம் செல்லும். அரிசிக்கு பதில் பணம் கொடுப்பது ஏமாற்று திட்டம்.
நமச்சிவாயம் வெற்றி பெற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் ஸ்மார்ட் மீட்டர் வந்து விடும் என பேசினார்.

