/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபைக்கு வந்த இயக்குனர்கள் யார்? சபாநாயகர் அதிரடியால் பரபரப்பு
/
சட்டசபைக்கு வந்த இயக்குனர்கள் யார்? சபாநாயகர் அதிரடியால் பரபரப்பு
சட்டசபைக்கு வந்த இயக்குனர்கள் யார்? சபாநாயகர் அதிரடியால் பரபரப்பு
சட்டசபைக்கு வந்த இயக்குனர்கள் யார்? சபாநாயகர் அதிரடியால் பரபரப்பு
ADDED : ஆக 09, 2024 04:46 AM
புதுச்சேரி: சட்டசபை கூட்ட தொடருக்கு வந்துள்ள துறை இயக்குனர்களின் பெயர் பட்டியலை சபாநாயகர் செல்வம் திடீரென கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தொடர் நடக்கும்போது, அரசு செயலர்கள் வருவதில்லை என, பொதுவாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து, சபாநாயகர் செல்வம் சட்டசபை கூட்ட தொடரின்போது அரசு செயலர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தார்.
இதேபோல், அரசு செயலர்கள் சட்டசபை கூட்ட தொடரில் கட்டாயம் இருக்க வேண்டும் என, தலைமை செயலர் சரத்சவுகான் சுற்றிக்கை மூலம் தெரிவித்து இருந்தார். ஆனால் அரசு செயலர்கள் சட்டசபை கூட்ட தொடரில் இருந்தபோதிலும், துறை இயக்குனர்கள் வருவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசி முடிந்ததும் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இன்றைய கூட்ட தொடருக்கு எந்தந்த துறை இயக்குனர்கள் வந்துள்ளனர். யார் வரவில்லை என்ற பட்டியலோடு, சபாநாயகர் அலுவலகத்தில் வந்து அமைச்சர்களின் தனி செயலர்கள் 10:30 மணிக்கு வந்து சந்திக்க வேண்டும் என, அறிவித்தார்.
அதன்படி அமைச்சர்களின் தனி செயலர்கள் பட்டியலோடு சென்று சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்தனர். அனைத்து துறை இயக்குனர்களும் கூட்ட தொடரில் ஆஜராகி இருந்தனர்.