/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போட்டியிடுவது ஏன்? தெய்வநீதி விளக்கம்
/
போட்டியிடுவது ஏன்? தெய்வநீதி விளக்கம்
ADDED : மார் 22, 2024 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட தட்டாஞ்சாவடியை சேர்ந்த தெய்வநீதி,54, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எட்டாம் வகுப்பு வரை படித்த அவர், புதுச்சேரி புதிரை வண்ணார் சங்க தலைவராக உள்ளார்.
அவர் கூறுகையில், 'அட்டவணை இன மக்களின் வாழ்வியலோடு கலந்தவர்கள் புதிரை வண்ணார்கள். புதுச்சேரியில் அட்டவணை இன மக்களுக்கு 1964ல் முன் ஆதாரங்கள் கேட்கப்பட்டது. கல்வியறிவு இல்லாதததால், எங்களால்தர முடியவில்லை.
அதன் பிறகு அட்டவணை இன பட்டியலில் கடந்த 2002ல் 15 சாதிகள் சேர்க்கப்பட்டன. 2002ம் ஆண்டிற்கு பிறகு 16-வது பெயராக புதிரை வண்ணார் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு கூட எஸ்.சி., என்று பொதுவாக கல்வி சான்றிதழ் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் பல சிக்கல் ஏற்படுகிறது. எங்களுக்கென தனி நலத்திட்டங்களில் இல்லை.
இதற்கு 2002 ஆண்டு பட்டியலில்படி எங்களை சேர்த்து நிரந்தர தனி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். புதிரை வண்ணார் பிரச்னையை தீர்ப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றேன்' என்றார்.

