/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து வழங்க முன்வராத பா.ஜ.,க்கு முதல்வர் ரங்கசாமி ஆதரவு அளிப்பது ஏன்?
/
மாநில அந்தஸ்து வழங்க முன்வராத பா.ஜ.,க்கு முதல்வர் ரங்கசாமி ஆதரவு அளிப்பது ஏன்?
மாநில அந்தஸ்து வழங்க முன்வராத பா.ஜ.,க்கு முதல்வர் ரங்கசாமி ஆதரவு அளிப்பது ஏன்?
மாநில அந்தஸ்து வழங்க முன்வராத பா.ஜ.,க்கு முதல்வர் ரங்கசாமி ஆதரவு அளிப்பது ஏன்?
ADDED : ஏப் 16, 2024 06:29 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, காரைக்கால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
மாநில அந்தஸ்து வழங்கும் பிரச்னையில் காங்., பா.ஜ., நாடகம் ஆடுகின்றன. 30 ஆண்டிற்கு மேல் ஆட்சியில் இருந்த காங்., மாநில அந்தஸ்து வழங்கவில்லை.
பா.ஜ., மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாநில அந்தஸ்து வழங்க முன் வராத பா.ஜ.வுக்கு முதல்வர் ரங்கசாமி எப்படி ஆதரவு அளிக்கிறார் என தெரியவில்லை.
தமிழகத்தில் இருந்து காவிரி நீர் பெறாததால், காரைக்காலில் விவசாயம் செய்யவே விவசாயிகள் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாய கடன் தள்ளுபடி என கூறி 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
காரைக்கால் தனியார் துறைமுகத்தை மூட மக்கள் போராடினர்.
ஆனால் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அந்த துறைமுகத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதானியின் ஆக்டோபஸ் கைகள் காரைக்கால் வரை நீண்டுள்ளது. புதுச்சேரி மின்துறையும் அதானி குழுமத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
இதே நிலை நீடித்தால் புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்கள் எல்லாம் பா.ஜ. விற்றுவிடும்.
பா.ஜ., அரசு ரேஷன் கடை திறக்கவில்லை. காரைக்கால் மீனவர்கள் ராமநாதபுரம், கன்னியாக்குமரிக்கு சென்று மீன்பிடிக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் தீக்கிரையாகும் சம்பவம் நடக்கிறது. இதனால் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்போம் என்று சொல்லும் நிலையில் பா.ஜ., ஆட்சி செயல்பாடு உள்ளது. இதனால் தேசிய கட்சிகளான காங்., பா.ஜ.வை புறக்கணித்து அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளியுங்கள் என பேசினார்.

