/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? மாஜி எம்.பி., கேள்வி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? மாஜி எம்.பி., கேள்வி
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? மாஜி எம்.பி., கேள்வி
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? மாஜி எம்.பி., கேள்வி
ADDED : ஆக 24, 2024 06:06 AM
புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது குறித்து முதல்வர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் எம்.பி.,யும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவருமான ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி புதுச்சேரியில் மூன்று அடுக்கு அரசாங்கம் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு ஆகியவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அந்த அரசை இயக்க வேண்டியது புதுச்சேரி அரசின் கடமை. துரதிருஷ்டவசமாக கடந்த 13 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி அரசை முடக்கி வைத்துள்ளது.
கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாமல் 100 நாள் வேலைத்திட்டம் 20 நாள் திட்டமாக மாறி, மத்திய அரசு நிதி 1,350 கோடி ரூபாய் புதுச்சேரி மக்களுக்கு செலவிடப்படாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நகராட்சிகள் இல்லாததால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பாழானது. இந்த இழப்புகளுக்கு காரணம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது தான். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என, முதல்வர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் போராட்டத்தோடு நீதிமன்ற கதவுகளையும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலக கதவுகளையும் தட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

