ADDED : ஜூலை 16, 2026 05:50 PM
புதுச்சேரி: சமையல் சரியாக செய்யவில்லை என கணவர் கூறியதால், மனமுடைந்த மனைவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோர்க்காடு படையாட்சி வீதியை சேர்ந்தவர், பக்தவச்சலம், 72; விவசாயி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த 11ம் தேதி இரவு சாப்பாடு சரியாக செய்யவில்லை என மனைவி இளமதியிடம், 66, கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இளமதி எலி பேஸ்ட்டை பாலில் கலந்து குடித்தார்.
மறுநாள் அதிகாலை தனது மகனிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்தார். பின் அவரை கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல வழி மையத்தில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக பிள்ளயைார்குப்பம் தனியார் மருத்துவமனை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் அவருக்கு அளிக்கும் சிகிச்சை பலனளிக்காததை தொடர்ந்து, இளமதியை நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து வந்தனர். நேற்று அவர் வீட்டியேலே இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
