/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தபடுமா?
/
புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தபடுமா?
ADDED : ஆக 29, 2024 07:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட 65 வகை விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள 65 விளையாட்டுகள் இன்னும் அறிமுகப்படவில்லை. பள்ளிகளில் சில விளையாட்டுகள் மட்டும் கற்றுதரப்படுகின்றது.
குறிப்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, பேஸ்பால், சைக்கிள் போலோ, செவித்திறன் குன்றியவர்கள் விளையாட்டுகள், பென்சிங், கூடோ, மல்லர்கம்பம், பாரா விளையாட்டு, பென்கேக் சிலாட், ஸ்சூட்டிங்பால், ரோல்பால், சாப்ட் டென்னிஸ், டென்பின் பவுலிங், டிரையத்லான், டென்னிஸ்பால் கிரிக்கெட், யோகாசனம் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளை பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர பள்ளி கல்வி கற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

