/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி தர மாட்டேன்' : கவர்னர் சி.பி.ராதாக்கிருஷ்ணன்
/
'அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி தர மாட்டேன்' : கவர்னர் சி.பி.ராதாக்கிருஷ்ணன்
'அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி தர மாட்டேன்' : கவர்னர் சி.பி.ராதாக்கிருஷ்ணன்
'அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி தர மாட்டேன்' : கவர்னர் சி.பி.ராதாக்கிருஷ்ணன்
ADDED : மார் 23, 2024 06:12 AM

புதுச்சேரி : அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி தரமாட்டேன் என, புதிய கவர்னர் சி.பி. ராதாக்கிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை கடந்த 18ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாக்கிருஷ்ணனுக்கு, புதுச்சேரி மாநில பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் பொறுப்பு ஏற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரி வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், சக பயணிகளுடன் சி.பி. ராதாக்கிருஷ்ணன் நேற்று மதியம் 12:05 லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தார்.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், கல்யாணசுந்தரம், வெங்கடேசன், தலைமை செயலர் சரத் சவுக்கான், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், அரசு செயலர்கள் அசிஷ் மாதோவ்ராவ், கேசவன் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புதுச்சேரி கவர்னர் மாளிகை வந்த கவர்னர் சி.பி.ராதாக்கிருஷ்ணனுக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது;
மூன்று மாநிலத்திற்கு கவர்னராக நியமித்த ஜனாதிபதி திரவுபதி முர்மூ, பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
மக்களுக்கு நல்லது செய்வது கவர்னரின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவேன். அரசியல் லாபத்திற்காக குறை சொல்பவர்கள், விமர்சனம் செய்வோருக்கு பதில் தரபோவதில்லை.
உலக அரங்கில் புதுச்சேரி வளர்ச்சி அடைய செய்வதிற்கு என்னால் இயன்ற முன்னேற்ற நடவடிக்கைகளை எடுப்பேன். புதுச்சேரி அரசிற்கு முட்டுகட்டையாக இருக்க மாட்டேன். ஒத்துழைப்பு தருவேன்.
கோப்புகளை ஆராய்ந்து அதற்கு அனுமதி அளிப்பேன். எந்த கோப்பையும் கால தாமதப்படுத்த மாட்டேன்.
அரசியல் சாசனத்திற்கு எதிரான கோப்புகளுக்கு அனுமதி அளிக்க மாட்டேன். தேர்தலில் போட்டியிடும் சகோதரி தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள் என, கூறினார்.

