/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போன்று அதிர்ச்சி கொடுக்குமா 'நோட்டா'
/
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போன்று அதிர்ச்சி கொடுக்குமா 'நோட்டா'
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போன்று அதிர்ச்சி கொடுக்குமா 'நோட்டா'
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போன்று அதிர்ச்சி கொடுக்குமா 'நோட்டா'
ADDED : ஏப் 15, 2024 04:51 AM
புதுச்சேரி : கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலைபோன்று, அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க நோட்டா காத்திருக்கின்றது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையுமே, பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் உள்ள, நோட்டா பட்டனை அழுத்தலாம் என்ற நடைமுறை, முதல் முறையாக, கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறைக்கு, அமோக ஆதரவு கிடைத்தது.
அப்போது நாடு முழுவதும், வேட்பாளர்களை பிடிக்காத, 60 லட்சம் பேர், நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்; இது, நாடு முழுவதும் பதிவான மொத்த ஓட்டுகளில், 1.1 சதவீதம். அந்த தேர்தலில் 21 கட்சிகள் பெற்றிருந்த ஓட்டு சதவீதத்தை விட, நோட்டாவுக்கு அதிக சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நாட்டிலேயே, அதிக அளவாக, புதுச்சேரி தொகுதியில்,பதிவான ஓட்டுகளில், 3 சதவீத ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்தன.
நாட்டிலேயே, அதிக அளவாக, புதுச்சேரி தொகுதியில், அங்கு பதிவான ஓட்டுகளில், 3.06 சதவீத
ஓட்டுகள், அதாவது 22,268 ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்தது.மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் புதுச்சேரி வாக்காளர்கள் நோட்டா பட்டனை இப்படி அழுத்தி,எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இருப்பினும் கடந்த லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு போடும் ஒட்டுகள்,1.54 சதவீதமாக குறைந்தது.12,199 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.நோட்டாவுக்கு போடுவதை காட்டிலும் வேட்பாளர்களுக்கு ஓட்டுகளை போட்டனர்.
இந்த லோக்சபா தேர்தலில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலைபோன்று வாக்காளர்களிடம் வேலையின்மை, விலைவாசி உயர்வு என பல்வேறு விஷயங்களில் அதிருப்தி நிலவுகிறது.
எனவே கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலைபோன்று அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்க நோட்டாவும் காத்திருக்கின்றது.குறிப்பாக பல அரசியல் கட்சிகள்,சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி வேட்பாளர்களுக்கு அருகில் இடம் பிடிக்க போகிறது?

