/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மவுனம் கலைப்பாரா? காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி
/
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மவுனம் கலைப்பாரா? காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மவுனம் கலைப்பாரா? காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மவுனம் கலைப்பாரா? காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி
ADDED : மார் 06, 2025 04:11 AM
புதுச்சேரி,: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மவுனத்தை கலைப்பாரா என காங்., தலைவர் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு விகிதாச்சார அடிப்படையில் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், தென்மாநிலங்களில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்து, நமது உரிமைகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டி தமிழக, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் மவுனம் காத்து வருகிறார்.
புதுச்சேரிக்கு இணையாக மக்கள் தொகை உள்ள கோவாவில் 40 எம்.எல்.ஏ.,க்களும், அருணாசல பிரதேசத்தில் 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், புதுச்சேரியில் 33 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். புதுச்சேரியில் 40 எம்.எல்.ஏ., இரண்டு எம்.பி., தொகுதிகளாக வரையறுக்க முதல்வர் குரல் கொடுக்க வேண்டும்.
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தற்போது, தென்னிந்திய மாநிலங்களில் புதுச்சேரி தனித்து விடப்பட்டுள்ளது. அதனால், தென்னிந்திய மாநில முதல்வர் கூட்டமைப்பில், புதுச்சேரியை இணைக்க வேண்டும் இல்லையெனில், வரும் காலத்தில் வரி வருவாய் இழப்பு, உரிமை இழப்பு ஏற்படும்.
எனவே, எதிர்கட்சியான தி.மு.க.,வும் இப்பிரச்னையில் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயல்கிறது. புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., அமல்படுத்தியது மூலம் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியை காட்டிக்கொடுத்து மொழி, உரிமை அழியமுதல்வர் காரணமாகி விடக்கூடாது. தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி விவகாரங்களில் முதல்வர் மவுனம் காப்பது காட்டிக்கொடுப்பதை போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.