/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்குமா?
/
பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்குமா?
பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்குமா?
பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்குமா?
ADDED : ஏப் 13, 2024 04:27 AM
புதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. ஓட்டுப் பதிவுக்காக 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் முதல் ஓட்டுப் பெட்டிகள் ஸ்ட்ராங் ரூமிற்கு செல்லும் வரை போலீசார் அங்கு பணியில் இருப்பர்.
தவிர, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணிக்கும் 10க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்படுவர். ஓட்டுப்பதிவின்போது, ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டும் தேர்தல் துறை உணவு வழங்குகிறது.
போலீசார் அனைவரையும் தேர்தல் துறைதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பு பணிகளை ஒதுக்கிறது. ஆனால், ஓட்டுச்சாவடி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் போலீசாருக்கு தேர்தல் துறை உணவு வழங்குவது இல்லை.
இதனால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் பாதுகாப்புக்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு, அந்தந்த பகுதி போலீஸ் நிலைய பொறுப்பாளர்கள் 3 வேலை உணவு தயார் செய்து கொடுக்கின்றனர்.
இந்த ஆண்டு தேர்தல் பாதுகாப்புக்கு செல்லும் போலீசாருக்கு, தேர்தல் துறையே உணவு தயார் செய்து வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

