/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டப்படுமா? புவன்கரே வீதியில் கடும் டிராபிக் ஜாம்
/
நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டப்படுமா? புவன்கரே வீதியில் கடும் டிராபிக் ஜாம்
நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டப்படுமா? புவன்கரே வீதியில் கடும் டிராபிக் ஜாம்
நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டப்படுமா? புவன்கரே வீதியில் கடும் டிராபிக் ஜாம்
ADDED : ஜூன் 03, 2024 05:25 AM

புதுச்சேரி : புவன்கரே வீதியில் அமைந்துள்ள தற்காலிக மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால், கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பில் நகராட்சி மார்க்கெட் இயங்கி வந்தது. இதில், இறைச்சி, மீன், காய்கறிகள் விற்பனை செய்ய தனி கட்டடம் இருந்தது.
இந்த கட்டடம் பழுதடைந்து, அடிக்கடி சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. கடந்த 2019ம் ஆண்டு வியாபாரம் செய்த பெண்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால், வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
புதிய மார்க்கெட் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு செல்ல வலியுறுத்தினர்.
ஆனால், நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் தற்காலிக கடைகள் அமைத்து தர முடிவு செய்தனர். அதன்படி, புவன்கரே வீதியில் தனியார் மருத்துவமனை எதிரில் நீண்ட வரிசையில் தற்காலிக ெஷட் அமைத்து அதில் கடைகள் இயங்கியது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் மீன், இறைச்சி, காய்கறி வியாபாரம் நடக்கிறது. பழுதான நெல்லித்தோப்பு மார்க்கெட்டும் இடித்து அகற்றப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை புது மார்க்கெட் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புவன்கரே வீதியில் தற்காலிகமாக அமைத்த கடைகளில் மீன், இறைச்சி வாங்க சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இச்சாலையை கடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மார்க்கெட் கட்டுவதற்கு பூர்வாங்க நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

