/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரி மீண்டும் படகு சவாரி துவங்கப்படுமா?
/
அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரி மீண்டும் படகு சவாரி துவங்கப்படுமா?
அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரி மீண்டும் படகு சவாரி துவங்கப்படுமா?
அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரி மீண்டும் படகு சவாரி துவங்கப்படுமா?
ADDED : மே 06, 2024 05:41 AM

புதுச்சேரி, : ஆகாய தாமரை இல்லாமல் அழகாக காட்சியளிக்கும் கனகன் ஏரியில் மீண்டும் படகு சவாரியை துவங்கினால், சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
திலாசுப்பேட்டையில், கழிவுநீர் விடப்பட்டும், ஆகாயத்தாமரை செடிகள் மண்டியும் இருந்த கனகன் ஏரி, கவர்னர் கிரண்பேடியின் நடவடிக்கையால் பொலிவு பெற்றது. கடந்த 2017ம் ஆண்டு இறுதியில், ஏரியை ஆய்வு செய்த கவர்னர் உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, ஆகாய தாமரைகள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டதோடு, வாக்கிங் செல்வதற்காக ஏரிக்கரை சமன்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும், இரண்டு கழிப்பறைகளும் கட்டப்பட்டு, படகும் விடப்பட்டது.
ஆனால், கவர்னர் கிரண்பேடி சென்றபிறகு கனகன் ஏரி தனது பொலிவை இழந்தது. சரிவர பராமரிக்கப்படாமல் ஆகாயத் தாமரைகள் மண்டி கிடந்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கனகன் ஏரி முழுதும் பரவி கிடந்த ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றது. நகர பகுதியில் படகு சவாரி செய்வதற்கு ஏற்ற இடமாக கனகன் ஏரி உள்ளது.
இதனை சரி வர பராமரித்து, மீண்டும் படகு சவாரியை துவங்கினால், மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு வருவாய் கிடைக்கும். இதற்கான பணிகளை பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டத்துடன் இணைந்து, சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னெடுக்க வேண்டும்.