/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசியலில் பெண்கள் தொடர்ந்து... புறக்கணிப்பு; இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட தேர்வாகவில்லை
/
புதுச்சேரி அரசியலில் பெண்கள் தொடர்ந்து... புறக்கணிப்பு; இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட தேர்வாகவில்லை
புதுச்சேரி அரசியலில் பெண்கள் தொடர்ந்து... புறக்கணிப்பு; இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட தேர்வாகவில்லை
புதுச்சேரி அரசியலில் பெண்கள் தொடர்ந்து... புறக்கணிப்பு; இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட தேர்வாகவில்லை
ADDED : ஏப் 15, 2024 04:01 AM
புதுச்சேரி, : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு முறையும் வெற்றியை தீர்மானிக்க கூடிய அசைக்க முடியாத சக்தியாக இருந்தபோதிலும், இதுவரை ஒருமுறை கூட பெண் எம்.பி., தேர்வு செய்யப்பட்டு, பார்லிமெண்ட்டி செல்லமுடியாத நிலை தொடர்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள் 4,80, 569; பெண்கள் 5,42,979 என மொத்தம் 10,23,699 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண்கள் வாக்காளர்கள் 62,410 பேர் கூடுதலாக உள்ளனர். கடந்த காலங்களிலும், லோக்சபா தேர்தல்களிலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருந்துள்ளனர்.
ஆனால், இதுவரை நடந்துள்ள லோக்சபா தேர்தலை எடுத்துக் கொண்டால் ஒருமுறை முறை கூட பெண் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்று, எம்.பி.,யாக புதுச்சேரியில் இருந்து பார்லிமெண்ட்டில் தடம் பதித்த தில்லை. ஆண் வேட் பாளர்களை ஒப்பிடும் போது பெண் வேட்பாளர்களும், அவ்வப்போது அத்திபூத்தாற்போல் போட்டியிட்டுள்ளனர் என்பதே சற்று ஆறுதல் விஷயம்.
புதுச்சேரியில் முதல் முறையாக 1963ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் மக்கள் முன்னணி சார்பில் சரஸ்வதி சுப்பையா நிறுத்தப்பட்டு 37.80 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து, நடந்த 1967, 1971, 1974, 1977, 1980, 1984 என 6 லோக்சபா தேர்தல்களில் ஒரு பெண் வேட்பாளர்களாக போட்டியிடவில்லை.
அதிசயதக்க வகையில், 1989, 1991, 1996 ஆகிய மூன்று லோக்சபா தேர்தல்களில் தலா ஒரு பெண் வேட்பாளர் வீதம் போட்டி யிட்டுள்ளனர்.
இந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க., பவானி மதுரகவி என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தது. மீண்டும் 1998, 1999ம் ஆண்டுகளில் லோக்சபா தேர்தல்களில் ஒரு பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
அதன் பிறகு 2004ம் ஆண்டு தேர்தலில் ஒரு பெண் வேட்பாளராக பா.ஜ.,வை சேர்ந்த லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர் 1,72,471 ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 28 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது கூட ஒரு பெண் வேட்பாளர்கள் கூட அரசி யல் கட்சிகள், சுயேச்சையாக களம் இறங்கவில்லை.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 3 பெண் வேட்பாளர்கள்,2019 ம் தேர்தலில் 2 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிவசப்படவில்லை. இந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 207 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனால் பெண் வேட்பாளர்களை எடுத்து கொண்டால் புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் மொத்தமே 13 பேர் மட்டுமே போட்டியிட்டுள்ளனர்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் 26 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஆனால் வெற்றி வாய்ப்புள்ள பிரதான அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை. லோக்சபா, சட்டசபையில் 33 சதவீத இட ஒதுக்கீடு பேசும் அரசியல் கட்சி லோக்சபா தேர்தல் என்று வரும்போது பெண்களுக்கு வாய்ப்பு தர மறந்துவிடுகின்றன. ஆனால் பெண்களிடம் ஓட்டுகேட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நிறுத்தப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர். ஆனால் வெற்றிவாய்ப்பு எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
இதனால் நீண்ட காலம் ஏக்கமாக இருந்து வரும் புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக பெண் எம்.பி., தேர்வு செய்து, பார்லிமெண்ட்டில் தடம் பதிப்பது இந்த முறையும் காணல் நீராகதான் உள்ளது.

