/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.ஜி.பி., அலுவலகம் முன் பெண் தர்ணா போராட்டம்
/
டி.ஜி.பி., அலுவலகம் முன் பெண் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 07, 2024 06:29 AM
புதுச்சேரி : டி.ஜி.பி., அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஐ.ஆர்.பி.என்., உதவி சப்இன்ஸ்பெக்டர் சந்திரன். கடந்த மே மாதம் தனது உதவி கமாண்டன்டருக்கு போன் செய்து, தனக்கு மருத்துவ விடுமுறை (லீவு) வேண்டும் என கேட்டார்.
அதற்கு, 'லீவு வேண்டுமானால் எனக்கு ஒரு பீஸ் (பெண்) ஏற்பாடு செய்து கொடு' என கேட்கும் உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. புகார் ஏதும் அளிக்க கூடாது என, தனது கணவரை மிரட்டுவதாக சந்திரன் மனைவி ஐ.ஆர்.பி.என். தலைமை கமாண்டரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டி.ஜி.பி., சந்தித்து முறையிட அனுமதி கேட்டதற்கும் போலீசார் அனுமதி தராமல் அலைக்கழித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு டி.ஜி.பி., அலுவலகம் வந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரனின் மனைவி டி.ஜி.பி.,யை சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என கூறி அலுவலகம் முன், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், ஐ.ஜி., யை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின், மாலையில் ஐ.ஜி.,யை சந்தித்து புகார் அளித்தார்.