/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் மகளிர் தினம்
/
நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் மகளிர் தினம்
ADDED : மார் 07, 2025 04:42 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.
ஆணையத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர் சுவிதா வரவேற்றார். இலவச சட்ட உதவி ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா,சட்டதுறை துணை செயலர் ஜான்சி சிறப்புரையாற்றினர்.
ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவனை டாக்டர் வல்சா டையானா, வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச்செயலார் நாராயணகுமார், ஆணைய உறுப்பினர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர். வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் இந்துமதி புவனேஸ்வரி பேசினார். விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வழக்கறிஞர் சங்க பொருளாளர் ராஜ்பிரகாஷ், தயாவதி, திலகவதி, சபிதா, ெஷபாலி, வர்ஷா, நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் திலகவதி, சுதா, சந்திரா உட்பட சட்டக் கல்லுாரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர் உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.மாநில நுகர்வோர் ஆணைய பதிவாளர் விஜயா நன்றி கூறினார்.