/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மகளிர் தின விழா
/
அரசு மருத்துவமனையில் மகளிர் தின விழா
ADDED : மார் 09, 2025 03:41 AM

வில்லியனுார் : இன்னர் வீல் கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மாஸ் சார்பில் வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா கொண்டாடினர். இன்னர் வீல் கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மாஸ் தலைவி செந்தில்செல்வி தலைமை தாங்கினார். டாக்டர் பாமகள் முன்னிலை வகித்தார். செவிலியர் சமீரபானு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வில்லியனுார் சமூக செயற்பாட்டாளர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.என்.எம்., பணியா ளர்கள், மகளிர் ஊழியர் களுக்கு சால்வை அணிவித்து கவுரவபடுத்தி நினைவு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் ஆப் புதுச்சேரி காஸ்மாஸ் நிர்வாகிகள் கிரிஜா, தமிழ்செல்வி, ராஜ லட்சுமி, காரைக்கால் பொதுப் பணித் துறை இளநிலை கணக்கு அதிகாரி கலியமுருகன், ரெட் கிராஸ் அய்யனார், வில்வம் பவுண்டேசன் தசரதன், வாஞ்சிநாதன் இள்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.