ஸ்வீடனில் 5 கி.மீ., நகர்த்தப்பட்ட 113 ஆண்டு கட்டடம்!
ஸ்வீடனில் 5 கி.மீ., நகர்த்தப்பட்ட 113 ஆண்டு கட்டடம்!
ADDED : ஆக 20, 2025 06:45 AM

கிருனா: ஸ்வீடனில், ஒரு சிறிய நகரமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையி ல், மரத்தால் கட்டப்பட்டுள்ள, 113 ஆண்டு பழமை யான சர்ச், 5 கி.மீ., துாரத்துக்கு நகர்த்தும் முயற்சி துவங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் வடக்கே உள்ளது கிருனா நகர ம். மொத்தம், 19,500 சதுர கி.மீ ., பரப்பளவு உள்ள இந்த நகரில், 23,000 பேர் வசித்து வந்தனர். இந்த நகருக்கு அருகே அமைந்துள்ளது மிகப்பெரிய இரும்புத் தாது ஆலை. பூமிக்கு அடியில், 4,000 அடி ஆழத்தில் மிகப்பெரிய அளவில் இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நகரில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை, அருகே புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றும் பணி நடந்தது.
இதன்படி, வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை பெயர்த்து எடுத்து, வாகனங்கள் வாயிலாக மாற்றப்பட்டு வந்தது. கடந்த, 2-004ல் இருந்து இந்தப் பணி நடந்து வருகிறது. கடைசியாக எஞ்சிய ஒருசில கட்டடங்களில் ஒன்று, 1912ல் கட்டப்பட்ட கிருனா சர்ச். இது, முழுதும் மரத்தால் கட்டப்பட்டது. கடந்தாண்டில், இந்தக் கட்டடத்தை மாற்று இடத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் துவங்கின.
அதன்படி, கட்டடம் அப் படியே பெயர்த்து எடுக்கப்பட்டு, பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட மிக நீண்ட டிரக்கில் வைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் பிரார்த்தனைகளுடன், புதிய இடத்துக்கு தன் பயணத்தை இந்த சர்ச் நேற்று துவக்கியது. மொத்தம், 672 டன் எடை, 120 அடி நீளமுள்ள இந்த கட்டடம், 5 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்து, புதிய இடத்தை 48 மணி நேரத்துக்குள் அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.