தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் மகளிர் விடுதி கட்டடம் திறப்பு 

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் மகளிர் விடுதி கட்டடம் திறப்பு 

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் மகளிர் விடுதி கட்டடம் திறப்பு 


ADDED : ஜூலை 16, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சரண்யா தேவி மகளிர் விடுதிக் கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, ரூ. 200 கோடி மதிப்பில் மாணவியர்களுக்கு குழுமத்தின் துணைத் தலைவர் கதிரவன் அனந்தலட்சுமியின் பேத்தி சரண்யா தேவி பெயரில் அமைக்கப்பட்ட இரண்டு 12 அடுக்கு விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன், அவர்களின் வசதிகள், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, மாணவியருக்கு நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு 12 அடுக்கு விடுதிகள்,  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள், ஏ.சி., அறைகள், தென் மற்றும் வட இந்திய உணவு வகைகள், லிப்ட், வாட்சிங் சோன், வாசிப்பு அரங்கு, ஜிம், உயர் தர நெட்வொர்க் வசதிகள் அமைந்துள்ளது’ என்றார். 

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மற்றும் கல்வி நிறுவனங்களை சார்ந்த முதல்வர்கள், முதன்மையர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us