உரிமம் இன்றி இயங்கும் நிறுவனங்களுக்கு 'சீல்' :ஆணையர் எச்சரிக்கை
உரிமம் இன்றி இயங்கும் நிறுவனங்களுக்கு 'சீல்' :ஆணையர் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 16, 2026 08:19 PM
ADDED : ஜூலை 16, 2026 08:11 PM
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துகளில் வர்த்தக உரிமம் இன்றி இயங்கும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆணையர் எழில்ராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து சட்டம், 1973 பிரிவு 121ன் படி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 'வர்த்தக உரிமம்' பெற்றிருத்தல் வேண்டும்.
ஆனால், கள ஆய்வில் பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் கொம்யூன் பஞ்சாயத்தின் வர்த்தக உரிமம் பெறாமல், புதுப்பிக்காமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், வர்த்தக உரிமம் பெற, நகர அமைப்பு குழுமத்தின் அனுமதி பெற வேண்டும்
எனவே, கொம்யூன் பஞ்சாயத்து எல்லைகளில் உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் உடனடியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி அல்லது இணையதளம் வாயிலாக (www.lgrams.py.gov.in) விண்ணப்பித்து, தங்களது நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வர்த்தக உரிமத்தை பெற வேண்டும்.
தவறும் பட்சத்தில், வர்த்தக உரிமம் இல்லாமல் அல்லது புதுப்பிக்காமல் இயங்கி வரும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
