தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓவர் குடிக்கு தொழிலாளி பலி

ஓவர் குடிக்கு தொழிலாளி பலி

ஓவர் குடிக்கு தொழிலாளி பலி


ADDED : ஏப் 12, 2024 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த தொழிலாளி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்து டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்தவர், தெய்வேந்திரன், 42; இவர் கூலி தொழிலாளி. தொடர்ந்து மது குடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததால், இவரது மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், இவர், தனது பெற்றோர் வீட்டில் தங்கி மது குடித்து விட்டு, இரவு நேரங்களில் வீட்டு வாசலில் படுத்து விடுவார்.

நேற்று முன்தினம் ஓவராக மது குடித்து விட்டு, வீட்டு வாசலில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் இவரது பெற்றோர் எழுந்து பார்க்கும் போது, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us