நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் ராம் நகரைச் சேர்ந்தவர் மணி, 58; கூலித்தொழிலாளி. இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் உள்ள இரும்பு கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.