நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அடுத்த அமட்டன் குளம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 39; கூலி தொழிலாளி. இவரது மனைவி செங்கேணி. 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தனது தந்தை பச்சையப்பனுடன் வசித்து வந்தார்.
தற்போது, லிங்காரெட்டிப்பாளையம் மேட்டு வெளி வயல் பகுதியில் தங்கி விவசாய வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் காரணமாக கணேசன் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் வலி அதிகரித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பச்சையப்பன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.