/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் பயிற்சி பட்டறை
/
வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் பயிற்சி பட்டறை
வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் பயிற்சி பட்டறை
வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : ஜூலை 08, 2024 04:09 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில், பிரசவத்திற்கு முந்தைய கால மற்றும் பிரசவகாலத்தில் பிசியோதெரபி பயிற்சி குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்வியியல் ஆலோசகர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இயன்முறை கல்லுாரி முதல்வர் டாக்டர் ஆனந்த்பாபு முன்னிலை வகித்தார். பேராசிரியர் பால்ராஜ் வரவேற்றார்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகி உமன்ஸ் ஹெல்த் கேர் நிறுவனர் டாக்டர் குஷ்பூ தாக்கர் பயிற்சி அளித்தார்.
இதில், பிரசவத்திற்கு பிந்தைய காலத்திற்கு பிசியோதெரபி பயிற்சிகளின் முக்கியத்துவம், பிரசவத்திற்கு முந்தைய காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை, இயற்கை பிரசவத்திற்கு தயார்படுத்துதல், அதற்கான உடற்பயிற்சி, சுவாச பயிற்சி குறித்த செய்முறை பயிற்சி அளித்தனர். பயிற்சி பட்டறையில் 40க்கும் மேற்பட்ட இயன்முறை மாணவ மாணவிகள் மற்றும்முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.