/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நாட்டுப்புற கலைகள் பற்றி பயிலரங்கம்
/
பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நாட்டுப்புற கலைகள் பற்றி பயிலரங்கம்
பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நாட்டுப்புற கலைகள் பற்றி பயிலரங்கம்
பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நாட்டுப்புற கலைகள் பற்றி பயிலரங்கம்
ADDED : மார் 26, 2024 10:34 PM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றி பயிலரங்கம் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி, மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, மூன்று நாட்கள் பயிலரங்கம் நடத்தியது.
லாஸ்பேட்டை சமூதாய கல்லுாரியில் நடந்த பயிலரங்கில், நிறைவு நாள் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு, பல்கலைக்கழக கலை மற்றும் பண்பாட்டு இயக்ககத்தின் இயக்குனர் கிளமண்ட் எஸ் லுார்துஸ் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் விநாயகம் வரவேற்றார். புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள, பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லுாரி, சாரதா கங்காதரன் கலை கல்லுாரி, போப் ஜான் பால் கல்வியியல் கல்லுாரி உட்பட பல கல்லுாரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பயிலரங்கத்தில், கைச்சிலம்பாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், தமிழிசை, பாரம்பரிய வாத்திய இசை, நையாண்டி, மேளம், தவில், சமூக நாடகம், நாட்டுப்புற பாடல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பங்கேற்ற கலைஞர்கள், மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், சமூதாய கல்லுாரி முதல்வர் லலிதா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பேராசிரியர்கள் சுப்பையா, சேவுகன், வேலு சரவணன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

