/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இழுவை வலைகள் குறித்து பயிலரங்கம்
/
இழுவை வலைகள் குறித்து பயிலரங்கம்
ADDED : செப் 15, 2024 07:08 AM
புதுச்சேரி: கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சென்னை மண்டல நெட்பிஷ் பிரிவு மற்றும் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இணைந்து 'இழுவை வலைகளில் ஆமை விளக்கு சாதனத்தை பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பங்குதாரர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் ஆனந்தா இன் ஒட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.
கடல்சார் மேம்பாட்டு ஆணையம் மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்மூர்த்தி வரவேற்றார். மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் அன்சர் அலி கருத்துரை வழங்கினார்.
பயிலரங்கில் புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலை வர், நிர்வாகி கள் மற்றும் பதிவுபெற்ற விசைப்படகு உரிமையாளர்கள். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சென்னை மண்டல பிரிவு நலத்துறை, மீனவர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.