sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உலக சாதனையாளர் தின மாநாடு

/

உலக சாதனையாளர் தின மாநாடு

உலக சாதனையாளர் தின மாநாடு

உலக சாதனையாளர் தின மாநாடு


ADDED : ஏப் 30, 2024 05:29 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸ், திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு, பல்லடம் முத்தமிழ் சங்கமம் சார்பில் மூன்றாம் ஆண்டு உலக சாதனையாளர் தினம் மாநாடு, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அரங்கத்தில் நடந்தது.

விழாவிற்கு, திருக்குறள் உலக சாதனையாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாநாட்டு குழு துனைத்தலைவர் சாதனைப் பெண் சீதளாதேவி வரவேற்றார்.

பேராசிரியர்கள் மணிமாறன் சம்பத்குமார், அசோகன் முன்னிலை வகித்தனர்.வேலுார் முத்தமிழ்ச் சங்க நிறுவுனர் கலைவாணி நோக்கவுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக புதுவைத் தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து கலந்து கொண்டு, தாகூர் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லுாரி தத்துவத்துறை பேராசிரியர் சம்பத்குமாருக்கு 35 ஆண்டுகள் இலக்கியம் மற்றும் கல்விப் பணியைப் பாராட்டி மகாத்மா காந்தி விருதும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய வரை படத்தில் சாதனை 2,600 மகளிர் பெயர்களை எழுதி சாதனைப்படைத்த ஆசிரியர் சீதளாதேவிக்கு உலக சாதனையாளர் விருதும்,மற்றும் ஓவியர் சியமளா,ரத்னா செந்தில்குமார் ஆகியோர்க்கு சாதனையாளர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் தமிழறிஞர்கள் சோமசுந்தரம், ஆறுமுகம் மற்றும் கனகவள்ளி,கதிரேசன், ஆசிரியர் வாசுகி பொன்னரசு, ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பகுதியில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டு பொருளாளர் தங்க தினேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us