தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா 

ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா 

ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா 


ADDED : ஆக 05, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனை, பச்சிளம் குழந்தைகளுக்கான அறக்கட்டளை மற்றும் செவிலியர் கல்லுாரி சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை குழந்தை நல டாக்டர் திருமுருகன் சேரன், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம், தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பில் அதன் பங்கு மற்றும் தாய்–சேய் ஆரோக்கியத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சுமதி இளங்கோவன், தலைமை கண்காணிப்பாளர் ஆதிகணேஷ், தலைமை மகப்பேறு டாக்டர் இந்திரா ஸ்ரீனிவாசன், மகப்பேறு டாக்டர் சிவலட்சுமி, குழந்தை நல டாக்டர் முத்துக்குமார் ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர்.

விழாவையொட்டி, தாய்ப்பால் குறித்த வினாடி–வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற 16 பேருக்கு இணை நிர்வாக இயக்குநர் சுமதி இளங்கோவன் பரிசு வழங்கினார். 

இதில், தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஏ.ஜி. பத்மாவதி செவிலியர் கல்லுாரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us