ADDED : ஆக 05, 2026 05:52 PM

புதுச்சேரி: ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ‘வெற்றிதரும் வழிமுறைகளை வலுப்படுத்துவோம், தாய்ப்பாலால் நிலையான தலைமுறையை உருவாக்குவோம்’ தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அதிகாரி குரு பிரசாத், துறைத் தலைவர் அனுராதா, சிறப்பு நிபுணர்கள் ரவி கண்ணன், முரளி, பச்சிளம் குழந்தை பிரிவு சரவணன் மற்றும் அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், வில்லுப்பாட்டு, சைகை நாடகம், தாய்மார்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் சுவரலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது. பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும். சரியான முறையில் தாய்ப்பால் கொடுப்பதற்கு, பாலுாட்டும் தாய்க்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
