தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி


ADDED : ஆக 05, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே வழிபறியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திமுருகன் தலைமையில் நேற்று காலை ஆரியப்பாளையம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டு நிற்காமல் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் ஒரு கத்தி, இரும்பு ராடு மற்றும் மகளிர் பயன்படுத்தும் பேக் இருந்தது. பேக் பிரித்து பார்த்தபோது அதில், பணம் இருந்தது.

விசாரணையில், அவர்கள், எம்.என். குப்பம்  சரவணன் மகன் சாம்ராஜ், 21; அரியூர் செந்தில்குமார் மகன் விக்னேஷ், 20; பள்ளித்தென்னல் மணிகண்டன் மகன் திவாகர், 22, ஆகியோர் என்பதும், பிள்ளையார்குப்பம் சாராயக்கடையில் ஸ்கூட்டரை திருடியதாகவும், கடந்த 2ம் தேதி பிள்ளையார்குப்பம் பகுதியில் ஒரு பெண்ணிடம்  வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த ஸ்கூட்டர், ரூ. 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us