/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 26, 2024 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி நலவழித்துறை பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், தவளகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் வரவேற்றார். கிராமப்புற செவிலியர் மேற்பார்வையாளர் பவுன் அம்பாள், செவிலிய அதிகாரி கலைமதி, கிராமப்புற செவிலியர் கலா, மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.
நிலைய மருத்துவ அதிகாரிகள்சாய்ஆனந்த், அஸ்மா ஆகியோர் கலந்து கொண்டு மலேரியா நோய் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறை குறித்து 'மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை சமமாக உலகத்திற்குவிரைவுபடுத்துதல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். கிராமப்புற செவிலியர் நிஷாந்தினி நன்றி கூறினார்.

