
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரோபிந்தோ சொசைட்டி சார்பில், உலக தண்ணீர் தினம் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
அரோபிந்தோ சொசைட்டி மூலம் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'அனைவருக்கும் தண்ணீர், தண்ணீருக்காக அனைவரும்' என்ற தலைப்பில் தண்ணீர் திருவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அரசு ஊழியர் சம்மேளனம் ராதாகிருஷ்ணன், ஹோப் அமைப்பு ஜோசப் விக்டர், ரசூல் இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் சுந்தரராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், 'பொது சொத்து' என கருதப்படவேண்டிய தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கீதா செய்திருந்தார்.

